இந்த பொழப்புக்கு...! பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் 'நாகை 360' யூ-டியூப் சேனல்

Jul 26, 2021 03:50 PM 2112

சிறுவர்களுக்கு அருவருக்கத்தக்க பாலியல் பேச்சுகளை சொல்லி கொடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது நாகை 360 என்ற யூ-டியூப் சேனல்.

சிறார்களை வைத்து வயிறு வளர்க்கும் அந்த சேனலின் சொந்தக்காரர் சரத் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது..?

 

தெருவில் செல்லும் டீச்சரிடம் காதல் டியூசன் படிக்க மன்றாடும் இந்த பிஞ்சில் பழுத்த பழம் தான், இப்போது இணையத்தில் வைரல்.

பாலியல் கிளர்ச்சியை தூண்டும் வகையில் பேச பயிற்சி கொடுத்து பக்கத்தில் நின்று பார்த்து ரசிக்கும் இந்த பாவமூட்டையின் பெயர் சரத்.

இவர் நாகை 360 யூ-டியூப் சேனலுக்கு சொந்தக்காரர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி போல ஏற்கனவே ஒத்திகை பார்த்த நாடகத்தை Prank என்ற பெயரில் அரங்கேற்றி ஊரை ஏமாற்றி வியூஸ் அள்ளுவது சரத்தின் தினசரி வேலை.

மாலா அக்காவே மறு பிறவி எடுத்து வந்தது போல் கனிந்துருகும் டீச்சர், அவரை வழி மறித்து அப்யூஸ் செய்யும் பொடியன் என அனைவரும் அவர் சிந்தையில் உதித்த கதாபாத்திரங்கள்.

image

டீச்சருக்கு புரோபஸ் செய்வது, காதலை ஏற்காத நிலையில் தற்கொலை மிரட்டல் விடுப்பது, திருமணம் ஆனாலும் என்னுடன் வா என்று எல்லை மீறிவது என ஏராளமான 18+ கண்டெண்ட்டுகளால் நிரம்பி வழிகிறது இவர்களது வீடியோ.

சென்ஸாரே வெட்கப்பட்டு விலகி ஓடும் காட்சிகளால் பாதிக்கப்படுவது வீடியோவில் உள்ள ஒரு சிறுவன் மட்டுமல்ல.

ஏனெனில் நாகை 360 என்ற நஞ்சு யூ-டியூபின் வீடியோ ஒவ்வொன்றும் 4 லட்சம் பேரை சென்று சேர்கிறது.

எனில் எத்தனை இளம் தளிர்கள் இதனைப் பார்த்து பிஞ்சிலேயே வெம்பும் அபாயம் உள்ளது...?

image

பெண்களை தவறான முறையில் வழி நடத்தியதாக பப்ஜி மதனின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விவரம் அறிந்த பெண்களுக்கு இழக்கப்பட்ட அநீதிக்கே கங்கணம் கட்டி கொண்டு களம் இறங்கிய காவல்துறை, குழந்தைகள் மீது சரத் போன்றோர் தொடுக்கும் பாலியல் போரை பார்த்தும் பார்க்காமல் கடப்பது எந்த வகையில் நியாயம்..?

Comment

Successfully posted