விங் கமாண்டர் அபிநந்தன் பணியிடமாற்றம்- இந்திய விமானப்படை

Apr 20, 2019 08:34 PM 90

காஷ்மீரில் பணியிலிருந்த விங் கமாண்டர் அபிநந்தனை மேற்கு பிராந்தியத்திற்கு பணியிடமாற்றம் செய்து விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியானதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தானின் எப்16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 2000 ரக விமானம் தாக்கப்பட்டதில் அதிலிருந்த விமானி அபிநந்தன் பராசூட் மூலம் கீழே குதித்தார். காற்று வீசிய திசையில் சென்ற அவர், பாகிஸ்தானில் இறங்கினார். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கிய அபிநந்தன், இந்திய அரசு மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டார். தற்போது காஷ்மீர் பல்லத்தாக்கில் இருக்கும் அபிநந்தனை மேற்கு பிராந்தியத்தில் உள்ள முக்கியத்துவம்வாய்ந்த விமானப்படை தளத்திற்கு மாற்றம் செய்து இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted