சென்னை மற்றும் மதுரையில் கணவன்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய மனைவிகள்

Oct 15, 2019 09:46 PM 101

சென்னை மற்றும் மதுரையில் மனைவிகளே, கணவன் மார்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதால் பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மதுரை அரசரடி பகுதிக்கு அருகில் உள்ள சீட்டாலாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித் குமார். இவர் நேற்று நள்ளிரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டி விட்டு , அவருடைய பிறப்பு உறுப்பை அறுத்து விட்டு சென்றுள்ளது. படுகாயமடைந்த ரஞ்சித் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல்கட்ட விசாரணையில் ரஞ்சித்குமாரின் மனைவி, சுபா கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது.. கணவர் தம்மை பிரிந்து, பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் கொன்றதாக சுபா கூறியுள்ளார்.

Comment

Successfully posted