கணவனை கொலை செய்து காரில் வைத்து எரிப்பு: மகனுடன் பெண் கைது

Nov 07, 2019 12:07 PM 138

கரூரில் கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்து காரில் வைத்து எரித்து நாடகமாடிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்தி அடுத்த குப்பம் அருகேயுள்ள பிராதன சாலையில், எரிந்த காரில் ஒரு ஆண் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரங்கசாமி என்பது தெரியவந்தது. இந்த நிலையில், ரங்கசாமியின் மனைவி மற்றும் மகனிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ரங்கசாமிக்கும் அவரது மனைவி கவிதாக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ரங்கசாமி அவரது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அஸ்வின் குமார், ரங்கசாமியின் கழுத்தை துண்டால் நெறிக்க, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனையடுத்து அவரது சடலத்தை காரில் ஏற்றிய கவிதாவும், அஸ்வின் குமாரும் குப்பம் பகுதியில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. அதன் பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comment

Successfully posted