விடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது

Nov 12, 2019 08:39 PM 347

விடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழைய மகாபலிபுரம் சாலையில் 100 க்கும் மேற்பட்ட மென்பொருள் ஐடி நிறுவங்கள் அமைந்துள்ளன. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

பெண்கள் பெரும்பாலும் தங்களின் பாதுகாப்பு கருதி பெண்களுக்கென அமைக்கப்படிருக்கும் விடுதிகளில் தங்கி பணி
புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் காரப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீநிவாஸ் பெண்கள் விடுதியில் 30 க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியினை சேர்ந்த பிரசாத் விடுதியின் சமையல் வேலைக்காக சேர்ந்துள்ளார்.

இவர் பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும் போது, ரகசியமாக வீடியோ எடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போழுது விடுதியில் வசிக்கும் பெண்கள் சிலர் பிரசாத் விடுதி பெண்கள் குளிக்கும் பொழுது யாருக்கும் தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளதாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..

விடுதி பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கண்ணகி நகர் போலிசார் பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted