சபரிமலைக்கு வரும் பெண்களை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் - கொல்லம் துளசி

Oct 13, 2018 11:58 AM 577

சபரிமலைக்கு வரும் பெண்களை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என பாஜக ஆதரவு நடிகர் கொல்லம் துளசி கூறியுள்ளார்.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் போகலாம் என உச்சநீதிமன்றம தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து சபரிமலையில் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் கேரள அரசும் தேவசம் போர்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கேரள பாஜக சார்பில் நடந்த ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட , நடிகர் கொல்லம் துளசி, சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அப்படி வெட்டப்பட்ட பெண்களின் ஒரு பாதியை டெல்லிக்கும் மற்றொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவரது இந்த கருத்து பாஜகவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

Comment

Successfully posted