ஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்

May 09, 2021 12:27 PM 5183

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு போக்குவரத்து பணிமனையில் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மகளிர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளச்சல், திங்கள் நகர், அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயங்கப்படும் சில பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய, பயணசீட்டு எடுக்க வேண்டும் என ஓட்டுநர்கள் அறிவுறுத்தியதையடுத்து இலவமாக பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். அனைத்து நகர பேருந்துகளிலும் இலவசமாக பெண்கள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சில பேருந்துகளில் இலவச பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Comment

Successfully posted