சாகசப்பிரியர்களுக்கான உலகின் அதிவேக “ரோலர் ஹோஸ்டர்”

Sep 16, 2019 04:30 PM 244

உலகின் மிக பயங்கரமான ரோலர் ஹோஸ்டர் விரைவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் திறக்கப்பட உள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக “தீம் பார்க்” அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான விளையாட்டு அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். இங்கு செல்லும் மக்களின் பயணம் ரோலர் ஹோஸ்டரில் ஏறாமல் முடிவதில்லை. அந்தளவு திகில் கலந்த சாகசப்பயணம் தான் அது.

image

இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உலகின் மிக நீளமான, நீளமான, அதிவேகமான “ரோலர் ஹோஸ்டர்” ஆரம்பிக்கப்பட உள்ளது. இங்குள்ள ‘Busch Gardens Tampa Bay’ என்னுமிடத்தில் தான் இடம் பெறுகிறது.

தரையிலிருந்து 206 அடி உயரத்தில் உயரம் வரை அமையும் இதில் பயணம் செய்யும் இருக்கைகள் மணிக்கு 76 கி.மீ. வேகத்தில் செல்லும். 4,075 அடியில் மூன்று தலைகீழ் பாதைகளை கொண்ட இருப்பு பாதைகளின் நீளம் 92 டிகிரி சாய்வில் அமைய உள்ளது.

இந்த ரோலர் ஹோஸ்டர் ‘Busch Gardens Tampa Bay’ இடத்தில் 10வதாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இது நிச்சயம் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் மறக்க முடியாத பயணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted