உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்

Jun 13, 2019 07:41 AM 688

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் 18-வது லீக் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 18-வது லீக் போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் நியூஸிலாந்தும் உள்ள நிலையில், நடப்பு தொடரில் இரு அணிகளும் தான் விளையாடிய போட்டி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான அணியாக நியூஸிலாந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்திய இந்தியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் மோதுவதால் தோல்வியை தவிர்க்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நாட்டிங்காமில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Comment

Successfully posted