உலககோப்பை கிரிக்கெட் : அல்க்ஸ் க்ரே தாடையை பதம் பார்த்த ஆர்சர்...

Jul 11, 2019 04:07 PM 298

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜோஃபர் ஆர்சர் வீசிய பந்து ஆஸ்திரேலியாவின் அல்க்ஸ் க்ரே தாடையை பதம் பார்த்தது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நடந்த முதலாவது அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து முதல் அணியாக இறுதி போட்டிக்கு நுழைந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதியில் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர் கொண்டு வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி 12.2 ஒவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்நிலையில் 8வது ஒவரை வீசிய ஆர்சரின் கடைசி பந்து ஆஸ்திரேலியாவின் அல்க்ஸ் க்ரே தாடையை பதம் பார்த்தது. இதனால் தாடையிலிருந்து ரத்தம் சொட்டியது. இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தற்போது அவர் தாடையில் கட்டுடன் ஆடி வருகிறார்.


 

image 

Comment

Successfully posted