உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு

Apr 15, 2019 09:59 AM 439

2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டி வரும் மே 30 ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்படுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு மும்பையில் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தி இறுதி வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் 2-வது கீப்பராக பங்கேற்க போகும் வீரர் யார்?, 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்க போகும் வீரர் யார்? என்று அறிந்து கொள்ள ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted