மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!!

Jul 11, 2020 10:06 AM 1144

மகாராஷ்டிரா மாநிலம் தாராவியில் கொரோனா வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மகாராடிஷ்டிரா மாநிலம் தாராவியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் அதனோம், இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகளிலும், மும்பையின் தாராவி உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலும் நோய் தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதே நேரம், ஒரு சில நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால் அங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்றும் அதனோம் கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய தலைமை, சமூக பங்களிப்பு ஆகியவை அவசியம் என்றும் அதனோம் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted