தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி

Jul 12, 2019 08:34 PM 73

திருச்செங்கோட்டில் மரங்களை காப்போம், பசுமையை காப்போம், நீரை சேமிப்போம் என்ற வாசகங்களை போல் நின்று தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வையப்ப மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் சுற்றுசுழல் பாதுகாப்பு தொடர்பான உலக சாதனை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தின் மூன்று பகுதிகளில் நடந்தது. இதில் மரங்களை காப்போம், பசுமையை காப்போம், நீரை சேமிப்போம் என்ற வாசகங்களை போல் நின்று திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ஆகியவற்றில் உலக சாதனையாக பதியப்பட்டது. மேலும் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டது.

Comment

Successfully posted