உலகளவில் 77 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்புǃ

Jun 13, 2020 12:13 PM 1011

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு, ஒரு லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 8 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ரஷ்யாவில் 5 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3 லட்சத்து 9 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேரும், பெருவில் 2 லட்சத்து 14 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை, உலகம் முழுவதும் சுமார் 39 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted