எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, சாகித்ய அகாடமி விருது

Dec 05, 2018 05:49 PM 256

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற நூலுக்கு இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதையான பழைய தண்டவாளம் கணையாழியில் வெளிவந்தது. தமது 18-வது வயதில் இந்தியா முழுவதும் பயணிக்கத் துவங்கினார். அவரது துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி உள்ளிட்ட பயண நூல்கள் புகழ்பெற்றவை.

Comment

Successfully posted