தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக எழுத்தாளர் இமயத்திற்கு கனடாவின் இயல் விருது

Dec 25, 2018 02:46 PM 187

2018 ஆண்டிற்கான கனடா நாட்டின் இயல் விருது எழுத்தாளர் இமயத்திற்கு கிடைத்துள்ளது.

கனடாவின் தமிழ் இலக்கிய தோட்டமும் டோரண்டோ பல்கலையின் தெற்காசிய கழகமும் இணைந்து ஆண்டுதோறும் இயல் விருதினை வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு எழுத்தாளர் இமயத்திற்கு இயல் விருது கிடைத்துள்ளது.

இவருடைய முதல் நாவலான கோவேறு கழுதைகள் மிகச்சிறந்த நாவலாக கருதப்படுப்படுகிறது. மனித மனங்களின் பல்வேறுப்பட்ட மனநிலைகளை தன்னுடை படைப்பாக்கங்களில் பிரதிபலிக்கும் எழுத்தாளர் இமயம், செடல், செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்களையும், நான்கு சிறுகதை தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவருக்கு இயல் விருது அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் டொரோண்டோவில் வழங்கப்படுகிறது.

 

Comment

Successfully posted