இந்தியாவில் தயாராகும் XR, XS ஐபோன்கள்

Jul 12, 2019 08:38 PM 228

இந்தியாவில் தயாராகும் ஐபோன் XR மற்றும் XS மாடல்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், பெங்களூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் மூலம் இந்தியாவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. முதற்கட்டமாக பழைய மாடல் போன்களை உற்பத்தி செய்து வந்த நிலையில், ஐபோன் XR மற்றும் XS செல்போன்கள் தற்போது தயாரிக்கப்படுகின்றன. இந்த போன்கள் ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஐபோன்கள் விலை இந்தியாவில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comment

Successfully posted