ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் 'எஸ் பேங்க்'

Mar 06, 2020 07:48 AM 699

தனியார் வங்கியான 'எஸ் பேங்க்' ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தனியார் வங்கியான 'எஸ் பேங்க்' ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன்சுமையினால் தத்தளித்து வரும் அந்த வங்கியை மீட்டெடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எஸ் பேங்க்கில் வைப்புத் தொகை வைத்துள்ளவர்கள் தற்போது அதிலிருந்து  50 ஆயிரம் ரூபாய் வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எஸ்.பேங்க்கினை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted