யோகா எந்த மதத்தையும் சார்ந்தது இல்லை - வெங்கையா நாயுடு

Dec 03, 2018 02:59 PM 278

யோகா எந்த மதத்தையும் சார்ந்தது இல்லை என்று, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மனிதர்கள் செய்யும் வேலைகளில் எவ்வித உடற் பயிற்சியும் இல்லை என்பதால் பல்வேறு நோய்கள் வருவதாக கூறினார். யோகா போன்ற உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, யோகா உடலுக்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் ஆரோக்கியம் தருவதால் அனைவரும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

யோகாவில் சூரிய நமஸ்காரம் செய்ய விருப்பமில்லையென்றால் சந்திர நமஸ்காரம் செய்யலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

Comment

Successfully posted