நீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி

Feb 19, 2020 09:59 AM 731

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லி.அதன் பின்பு தொடர்ந்து தெறி, மெர்சல்,பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.விஜய் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.ஆனால் பிகில் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என சில விமர்சனங்களில் கூறப்பட்டது.

பிகில் படத்திற்கு பிறகு அட்லி அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.விரைவில் ஷாருக்கானுடன் இணைய உள்ளார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

image

இயக்குனர் அட்லி சினிமாவில் ஆக்டிவாக இருந்தாலும்,  தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை தவறவில்லை.அந்த வகையில் இன்று காலையிலேயே ப்ரியா அவர் வளர்க்கும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘My world love you both ’ என்று அட்லி கூறியுள்ளார்.

image

Comment

Successfully posted