புத்தக வாசிப்பின் மூலம் வரலாறுகளை அறிந்து கொள்ளலாம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Dec 10, 2018 08:33 AM 608

புத்தக வாசிப்பின் மூலம் வரலாறுகளை அறிந்து கொள்ளலாம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் 7-வது புத்தககண்காட்சி நவம்பர் 29-ம் தேதி தொடங்கியது. 10 நாட்களாக,164 அரங்குகளுடன் நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து பலவகையான புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில், புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், புத்தக விற்பனை ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ளது திண்டுக்கல்லிற்கு கிடைத்த பெருமை என்று கூறினார். புத்தக வாசிப்பின் மூலம் வரலாறுகளை அறிந்துள்ளலாம் என்று கூறிய அவர், புத்தகக் கண்காட்சி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted