இளம் தலைமுறையினரை கவரும் ஆன்லைன் ஷாப்பிங்

Sep 15, 2019 12:36 PM 369

வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் நாம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மீதே அதிக ஆர்வம் காட்டுகின்றோம், அந்த வகையில் தற்போது அனைவரையும் எளிதில் கவர்ந்து வருகிறது ஆன்லைன் ஷாப்பிங், என்னதான் ஷாப்பிங் பன்னுவதற்கென்று மாட மாளிகைகள் பல இருந்தாலும் தற்போது வளர்ந்து வரும் நவீனக்காலக்கட்டத்தில் நாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்ககூடிய பொருட்களைதான் விரும்புகிறோம், அந்த வகையில் தற்போது அனைவரையுமே கவர்ந்து வருகிறது அன்லைன் ஷாப்பிங்.

அந்த காலத்தில் தீபாவளி மற்றும் இதர விழாக்கள் என்றால் குடும்பத்தோடு சென்று சிரித்து பேசி மனதுக்கு பிடித்தாற்போல உடைகள் வாங்கி வருவார்கள். அதுவும் குறிப்பிட்ட வகை குறியீடு உடைய உடைகள் தான் சிலர் வாங்குவார்கள். பட்டு என்றால் காஞ்சிபுரம் பட்டு , திருபுவனம் பட்டு என தேடி தேடி உடைகளை வாங்குவார்கள். அப்படி இருந்த காலம் எல்லாம் மாறி தற்போது எளிதில் கிடைக்ககூடிய பொருட்களைதான் மக்கள் விரும்புகிறார்கள்.

அதற்கும் தொலைபேசியே உதவியாக இருக்கிறது. தொலைபேசியில் விளம்பரம் என்ற பெயரில் வித விதமான ஆடைகளின் விளம்பரங்கள் மக்களை கவர்கிறது. தங்களது நேரத்தை மிச்சப்படுத்துவதால் தான் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புவதாக இளைஞர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் தற்போது தங்களுக்கு தேவையான செருப்பு,டி-சர்ட்,கண்ணாடி,என அனைத்தையுமே அன்லைனில் வாங்குகின்றனர். எல்லைகளைக் கடந்து, எல்லோரையும் இணைத்துக்கொண்டிருக்கும் நியூஸ் ஜெ செய்திகளுக்காக கௌசல்யா சேகர்.

Comment

Successfully posted