பெற்றோரின் எதிர்ப்பால் ரகசிய திருமணம் செய்த காதல் ஜோடி ; காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்ஜோடி தஞ்சம்

Mar 15, 2020 08:22 AM 980

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே காதல் ஜோடி திண்டிவனம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திண்டிவனத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகேயுள்ள எசாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லை குமார் என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விளங்கம்பாடியைச் சேர்ந்த ரேணுகா தேவி என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே ரகசிய திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடி மற்றும் அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் காதலருடன் பெண்ணை அனுப்பி வைத்தனர்.

Comment

Successfully posted