காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை

Jun 12, 2019 07:59 PM 62

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித், அவருடைய சகோதரரான ரஞ்சித் ஆகிய இருவரும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்திட வந்துள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் அஜித்தை ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோயில் திருவிழா ஒன்றின்போது விக்கி என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அஜித்தை மர்ம கும்பல் படுகொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து வரும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related items

Comment

Successfully posted