முதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்

Nov 18, 2019 08:20 PM 163

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வார்த்தைகளை கொண்டு அவரது உருவ படத்தை இளைஞர் ஒருவர் தத்ரூபமாக வரைந்துள்ளார்.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த பரூக் என்பவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொண்ட பற்றால் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் அவரது சிறப்பான ஆட்சி மீதும் கொண்ட ஈர்ப்பால் அவரது வாழ்க்கை வரலாற்றில் தொடங்கி அவரது பள்ளி, கல்லூரி, அரசியல் நாட்டம், அவர் வகித்த முக்கிய பொறுப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்களை இந்த உருவப்படத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி அம்மா நாமம் வாழ்க என்ற வார்த்தைகளுடன் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted