இணையத்தில் நடிகைக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த இளைஞர்

Jan 12, 2020 03:52 PM 2452

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக திரைப்பட நடிகை நந்திதா ஸ்வேதா குற்றம்சாட்டியுள்ளார்.

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் இளைஞர் ஒருவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதற்கான ஆதாரத்தையும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வாஞ்சி செழியன் என்ற பெயரில் இருந்து இளைஞர் அனுப்பிய பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது போன்ற குறுஞ்செய்திகளையும் அவரது புகைப்படத்தையும் நந்திதா பகிர்ந்துள்ளார். இது போன்ற நபர்களை என்ன செய்வது என்றும் அவர்களுக்கு குடும்பம் இல்லையா? எனவும் நடிகை நந்திதா தனது பதிவில் ஆத்திரமடைந்துள்ளார்.

Comment

Successfully posted