இளைஞர்கள் அலட்சியம் காட்டாமல் முகக் கவசம் அணிய வேண்டும்! - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Jul 11, 2020 01:49 PM 1038

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அலட்சியம் காட்டாமல் இளைஞர்கள் அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச டயாலிசிஸ் மையத்தை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுநீரக பிரச்னைகள் அதிகரித்து வருவதால், டயாலிசிஸ் மையங்களை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த இலவச டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இளைஞர்கள் அலட்சியம் காட்டாமல், முகக் கவசங்களை முறையாக அணிய வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தினார். சந்தை பகுதிகளில் நோய் தொற்றை தடுக்க மார்க்கெட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சந்தைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தேவையற்ற சேவைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

Comment

Successfully posted