இணையதள சேவையை தவறாக பயன்படுத்தும் இளைஞர்கள் -விவேக்

Jan 12, 2019 01:19 PM 277

இணையதள சேவையை இளைஞர்கள் தவறாக பயன்படுத்துவதால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரிகளவில் நடைபெறுவதாக நடிகர் விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் விவேகானந்தரின் 156வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி விவேக் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இணையதள சேவையை இளைஞர்கள் தவறாக பயன்படுத்துவதால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக வேதனை தெரிவித்தார்.

Comment

Successfully posted