நக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்கள்: அமைச்சர் அமித்ஷா

Dec 07, 2019 06:56 AM 173

நக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்களை நியமிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டிலேயே மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃபில் 3.25 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்த படையின் பணிநடவடிக்கைகள் குறித்து அண்மையில் ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை ராணுவப் படையில் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாவோயிஸ்ட், நக்ஸல் தீவிரவாதிகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகள் ஆகிய அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு, சிஆர்பிஎஃபில், இளம் வீரர்களை நியமிக்குமாறு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted