குத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு

Dec 13, 2019 06:30 PM 239

திருப்பூர், போயம்பாளையம் அருகே குத்துவிளக்கை திருடிய இளைஞர் தப்பிக்க முயன்ற போது குட்டையில் விழுந்து மாயமானார்...

திருப்பூர், குருவாயூரப்பன் நகர் பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவர் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வீட்டின் முன் கோலமிட்டு அதில் குத்துவிளக்கேற்றி வைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் குத்து விளக்கை திருடியுள்ளார்.இதனை பார்த்த அருகிலிருந்தோர் இளைஞரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக இளைஞர் நால்லாறு குட்டையில் தவறி விழுந்துள்ளார். குட்டையில் தவறிவிழுந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted