இளையோர் ஒலிம்பிக் வில்வித்தை - வெள்ளிப் பதக்கம் வென்றார் அரியானா வீரர்

Oct 19, 2018 10:44 AM 433

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின், வில்வித்தைப் பிரிவில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் மாலிக் (வயது 15) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இறுதிச்சுற்றில் இவர் அமெரிக்க வீரர் டிரண்டன் கோவல்சிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளது.

நான் பதக்கம் வென்றதன் மூலம் எனது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அடுத்து 2020-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும் என வெற்றிக்கு பிறகு ஆகாஷ் மாலிக் கூறினார்.

Comment

Successfully posted