பெண்கள் பெயரில் போலி முகநூல் கணக்குகளை தொடங்கிய இளைஞர் கைது!!

Aug 13, 2020 06:39 AM 330

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியின் பெயரில் போலியாக முகநூல் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு, அதில் தன்னை பாலியியல் தொழில் செய்யும் பெண் எனவும் தன்னை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டு தொலைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோல் பல பெண்களின் பெயரில் தொலைபேசி எண்ணுடன் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் தொடர் தொலைப்பேசி அலைப்புகளின் மூலம் நிம்மதி இழந்து தவித்த பெண் ஒருவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் ஆன் லைன் மூலம் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கை விசாரணை செய்த அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், அதே பகுதியை சேர்ந்த 8 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கல்லூரி மாணவியின் முன்னாள் காதலன் மஹாதேவன் என்பவர், இந்த முகநூல் கணக்கை தொடங்கியதும், இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட நிலையில், காதலியை பழிவாங்க இது போன்ற செயலில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.அவரை கைது செய்த காவல்துறையினர், மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

Comment

Successfully posted