காதல் தோல்வியால் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி

Feb 15, 2020 01:18 PM 364

ராஜபாளையம் அருகே காதல் தோல்வியால் , காதலர் தினத்தில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தையொட்டி தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு,  மாணவியிடம் அருண் கேட்டுள்ளார்.. ஆனால் அவர்  ஏற்க மறுத்ததால், விரக்தி அடைந்த அருண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted