பாரம்பரிய விதைகளில் மட்டும் விவசாயம் செய்யும் இளைஞர்

Dec 13, 2019 06:48 AM 300

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு இளைஞர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் வித்தியாசம் படைத்து வருகிறார்.


திண்டுக்கல் மாவட்டம், அத்திக்கோம்பையை சேர்ந்த பரமேஸ்வரன் என்ற இளைஞர் பொறியியல் படிப்பை முடித்து விட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் பல்வேறு வகையான வெண்டைச் செடிகளை நடவு செய்து வருகிறார். அதில், சிவப்பு வெண்டைக்காய், தடிமன் வெண்டைக்காய், யானை தந்த வெண்டைக்காய் என 15 வகையான வெண்டைக்காய்களை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய விதையினால் விளைவிக்கப்படும் இவரது தோட்ட வெண்டைக் காய்கள் 50 நாட்களில் காய்ப்புக்கு வந்து அதிகபட்சம் 2 வருடம் வரை காய்த்துக்கொண்டே இருக்கும் என பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted