யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்ன ?

Oct 18, 2021 05:56 PM 9011

சாதி ரீதியாக பேசியதாக, அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின்பேரில், இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

 image

கடந்தாண்டு ரோஹித் சர்மாவுடன் யுவராஜ் சிங் இணைந்து இன்ஸ்டாகிராமில் உரையாடும்போது, சாஹலுக்கு எதிராக சாதிய வன்ம வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.

 image

இதையடுத்து, யுவராஜ் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட யுவராஜிடம், மூன்று மணிநேர விசாரணை நடைபெற்றது.

 image

தாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறினார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், யுவராஜ் சிங் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
image

Comment

Successfully posted