கிண்டலடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாண்டியாவுக்கு ஜாகீர்கான் பதிலடி

Oct 09, 2019 07:06 PM 2019

இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஜாகீர்கான், தனது 41-வது பிறந்த நாளை திங்கட் கிழமை கொண்டாடினார். சக வீரர்கள் உள்பட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா, ஜாகீர்கானுக்கு வாழ்த்துக்கள் கூறி கிண்டல் தனமாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், உள்ளூர் போட்டியில் ஒன்றில் ஜாகீர்கான் வீசிய வேகப்பந்தை, ஹர்த்திக் பாண்டியா மைதானத்தில் இருந்து சர்வ சாதரணமாக தூக்கி வெளியே அடிக்கிறார். அப்போது, பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாகீர்கான். நான் இங்கு செய்ததைப் போலவே, நீங்களும் பந்தை அடித்து நொறுக்குவீர்கள் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

ஹர்த்திக் பாண்டியாவின் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் பலரும், பாண்டியாவுக்கு ட்வீட் செய்து பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில், பாண்டியாவின் ட்விட்டர் பதிவுக்கு, ஜாகீர்கான் கோபம் அடையாமல், அமைதியான முறையில் பதிலளித்துள்ளார். ஹா ஹா ஹா ஹா... வாழ்த்துக்கள் கூறிய பாண்டியாவுக்கு நன்றி. எனது பேட்டிங் திறமை, உங்கள் அளவுக்கு ஒருபோதும் சிறப்பாக இருக்க முடியாது. ஆனால், அந்த போட்டியில் நீங்கள் எதிர்கொள்ளும் அடுத்த பந்து போலவே எனது பிறந்த நாள் நன்றாகவே இருந்தது என்று நினைவுப்படுத்தி ட்வீட் செய்தார்.

Comment

Successfully posted