காஷ்மீரில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதி சுட்டுக்கொலை

May 24, 2019 06:29 PM 100

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அல் கொய்தா இயக்கத்தின் தளபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜாகீர் முசா என்பவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இவரை காஷ்மீர் போலீசார் நீண்ட காலமாக தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. 

Comment

Successfully posted