சென்னையில் மண்டல வாரியாக அதிகரிக்கும் கொரோனா!

Jun 28, 2020 12:11 PM 399

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 455ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 6 ஆயிரத்து 221 பேரும், தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்து 758 பேரும், அண்ணாநகரில் 5 ஆயிரத்து 506 பேரும், கோடம்பாக்கத்தில் 5 ஆயிரத்து 432 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 4 ஆயிரத்து 387 பேரும், அடையாறில் 3 ஆயிரத்து 202 பேரும், வளசரவாக்கத்தில் 2 ஆயிரத்து 310 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் 2 ஆயிரத்து 120 பேருக்கும், திருவொற்றியூரில் 2 ஆயிரத்து 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted