விஷம் குடிக்கும் வீடியோவை டிக் டாக்கில் வெளியிட்ட இளம்பெண்

Jun 12, 2019 12:02 PM 43

பெரம்பலூர் அருகே விஷம் குடிக்கும் வீடியோவை இளம்பெண் ஒருவர் டிக் டாம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவரது கணவர் பழனிவேல், சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தைக்கு காலில் அடிப்பட்டதால் சிங்கப்பூரில் இருந்த கணவர் பழனிவேல் அனிதாவை கடுமையாக திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த அனிதா விஷம் அருந்தியுள்ளார். தான் விஷமருந்தியதை வீடியோவாக டிக்டாக்கிலும் பதிவிட்டுள்ளார். விஷம் அருந்திய அனிதாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Comment

Successfully posted