ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு

Dec 21, 2018 03:32 PM 79

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தையடுத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பசுமை தீர்ப்பாயத்தில் வெளியாகும் முன்பே வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவு நகல் கிடைத்தது எப்படி என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு பிற்பகலில் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Comment

Successfully posted