திருத்தணி அருகே கடந்த ஆண்டு மாயமான மாணவி வழக்கில் திருப்பம்

Feb 12, 2019 07:42 AM 142

திருத்தணி அருகே, கடந்த ஆண்டு காணாமல் போன மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவத்தில், தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கீச்சலம் கிராமத்தில், ஓடை பகுதியில் பள்ளிச் சீருடையில் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து, பதறிப்போன மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போன, வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவியின் எலும்புக்கூடு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி காணாமல் போனது பற்றி, பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் பெற்றோர் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் திருத்தணி டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகாவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Comment

Successfully posted