பெட்ரோல் பங்கில் தீப்பற்றி எரிந்த வாகனம்

Feb 16, 2019 12:10 PM 118

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் டீசல் ஏற்ற வந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

எழுமாத்தூர் மண்கரடு பகுதியில் பெட்ரோல் பங்கில் நேற்றிரவு டீசல் ஏற்ற வந்த வாகனத்தில் இயந்திர கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றியது. இதையடுத்து பெட்ரோல் பங்கின் ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் இருக்க வாகனத்தை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

பெட்ரோல் பங்கின் எதிரிலேயே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும்நிலையில், பெரிய அளவில் ஏற்பட இருந்த விபத்து ஊழியர்களின் துரித செயல்பாட்டால் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Comment

Successfully posted