பேருந்தை சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வைரல் வீடியோ..

Sep 27, 2019 09:34 AM 233

 கேரளாவில் தவறான வழியில் செல்லும் அரசு பேருந்தை வழி மறித்து சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், காசர்கோடியிலிருந்து கோட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் ஓட்டுநர் சாலை விதிகளை மீறி, வலது பக்கம் வண்டியை ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த பெண் ஒருவர், பேருந்திற்கு வழிவிடாமல் அப்படியே நின்றுவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத ஓட்டுநர், பேருந்தை மீண்டும் இடப்பக்கம் திருப்பி ஓட்டிச் சென்றார். ஓட்டுநர் பேருந்தை திருப்பும் வரை அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்த பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted