பொங்கல் புடிக்காதா இல்ல ஒத்துக்காதா? பிக்பாஸ் வீட்டில் இன்றைய கலாட்டா....

Jun 25, 2019 04:15 PM 818

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 2 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகியதை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனும் தொடங்கியது.

நேற்று தான் பிக்பாஸ் வீட்டின் முதல் நாள், ஆனால் அவர்கள் அனைவரும் முதல் நாள் போலவே நடந்துகொள்ளவில்லை..பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை ஜாலியாக எடுத்துக்கொண்டு ஒருவொருக்கொருவர் சரமாரிய கேள்விகளை கேட்டுக்கொண்டு அதற்கு பதிலும் அளித்து சக போட்டியாளர்களால் மாலை அணிவித்து கொண்டனர்.

இன்று பிக்பாஸ் வீட்டின் 2வது நாள்,இன்றைக்கான முதல் ப்ரோமோவில் வனிதாவிற்கும், சாக்‌ஷி அகர்வாலிற்கும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.சாக்‌ஷியை நோக்கி வனிதா கோபமாக ’உங்களுக்கு பொங்கல் புடிக்காதா இல்ல ஒத்துக்காதா ? என்று கேட்கிறார்.அதற்கு சாக்‌ஷி என்னை கொஞ்சம் பேசவிடுங்களேன் என்று கூறுகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில் மோகன் வைத்யா அவர்கள்,’ என் கஷ்டத்தை சொல்லி அழுவதற்கு கூட யாரும் இல்லை’ எனக் கூறி அழுகிறார் அவரை சுற்றி முகென், தர்ஷன் நின்றுக்கொண்டு ஆறுதல் வார்த்தை கூறிக்கொண்டிருந்தனர்.இன்றைய நாள் சண்டையில் தொடங்கி சோகத்தில் முடியலாம் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

 

Comment

Successfully posted