தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்பால் வாகன விபத்துகள் அதிகரிப்பு

Jun 17, 2021 09:01 PM 437

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு பிறகு போக்குவரத்து விதிமீறலும், வாகன விபத்துகளும் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறையும் முன்பே டாஸ்மாக் கடைகள் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டன. அதன் பிறகு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாகன விபத்துகள் அதிகரித்து இருக்கிறது. விபத்து ஏற்பட்ட பின் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பலர் மது போதையில் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.

அதேபோல போக்குவரத்து விதிமீறலும், ஊரடங்கு விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. சென்னையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கு இடையேயான எல்லைகளில் மொத்தம் 153 இடங்களில் தடுப்புகள் மூலமாகவும் சோதனை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு மீறுபவர்களில் பெரும்பாலானோர் மது அருந்திக் கொண்டு வாகனம் ஓட்டுவது தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted