மனைவியை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய வழக்கு - மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் 

Oct 11, 2018 08:37 PM 630

மனைவியை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான்க்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நடிகர் மன்சூர் அலிகானின் 3 வது மனைவி வஹிதா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை நடிகர் மன்சூர் அலிகான், தனது 2 வது மனைவியின் வாரிசுகளுடன் சேர்ந்து கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வஹிதா நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தநிலையில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னையில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, மனுதாரர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Comment

Successfully posted