இத மட்டும் நான் மறக்கமாட்டேன் :சச்சினை பற்றி நெகிழ்ந்த பிருத்விராஜ்

Dec 27, 2019 06:13 PM 910


தமிழில், கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர் பிருத்விராஜ்.இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

இவர் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு தனது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.’நாங்கள் நடிகர்கள் ஒரு நாளைக்கு நிறைய புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்போம்.அதனை நாங்கள் மறந்திருபோம், ஆனால் எடுத்த ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.அதே போல் தான் எனக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன்.ஒரு முறை கொச்சியிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் நான் அமர்ந்திருந்தேன்.அப்போது என் அருகில் சச்சின் வந்து அமர்ந்தார்.நான் அப்போது கொச்சியிலிருந்து மும்பை வரை அவருடன் பேசிக்கொண்டே வந்தேன்.இந்த நிகழ்வை சச்சின் மறந்திருக்கலாம் . ஆனால் என் வாழ்க்கையில் இது மறக்கமுடியாத தருணம்’ என்று கூறியுள்ளார்.

Comment

Successfully posted

Super User

good look very clear chennal