வாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா!

Oct 19, 2020 11:20 AM 2622

 வாடிவாசல் படத்துக்காக தனது தோற்றத்தை நடிகர் சூர்யா மாற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் சூர்யா நடித்த, `சூரரைப்போற்று’ திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில்,வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் `வாடிவாசல்’. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்துக்கும் அதிகரித்துள்ளது. கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

image

படத்துக்காக சூர்யா தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். படத்துக்கு படம் தன் தோற்றத்தில் மாற்றத்தைக் காட்டி வரும் சூர்யா, வாடிவாசலுக்காகவும், தன் தோற்றத்தில் வித்தியாசத்தைக்காட்டியுள்ளார்.  நீண்ட தலைமுடியுடன், தாடி வைத்த சூர்யாவின் புதிய தோற்றம் தான் இணையத்தில் தற்போதைய வைரல். படத்தில் சூர்யா தந்தை, மகனாக இரண்டு வெவ்வேறு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted