"தல- தளபதி ரசிகர்களே...ப்ளீஸ் இதை செய்யுங்க"... - நடிகர் விவேக் வேண்டுகோள்

Oct 14, 2019 04:53 PM 1268

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் சொந்த வாழ்க்கையில் மரம் நடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஏராளமான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் நாளைய தினம் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் #plantforkalam என்ற Hashtag-ஐ ட்ரெண்ட் செய்யுமாறு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது அப்துல்கலாம் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மரம் நட வேண்டும் என கூறியுள்ளார்.

அவரின் இந்த கோரிக்கையை ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் தாண்டி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் #plantforkalam என்ற Hashtag-ஐ இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு நடிகர் விவேக் நன்றி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted