அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரம்!

Mar 31, 2021 09:33 PM 669

தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், நரசிம்மபுரம் பகுதிகளில் பொது மக்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், பாலக்காடு சாலை முழுவதும் அகலப்படுத்தி, தடுப்புகள் அமைத்து விபத்துக்களை குறைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பொள்ளாச்சி சாலை முழுவதும் சிறப்பான மேம்பாலங்கள் அமைத்து தரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட ஆளில்லாமல் காங்கேயத்தில் இருந்த ரவுடியை அழைத்து வந்து திமுகவினர், இங்கு நிறுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

 

 அதனைத்தொடர்ந்து, பி.கே.புதூர் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், அமைச்சரின் சாதனைகளை பாராட்டும் வகையில், பாடலை ஒன்றை தயாரித்து பாடினர்.

 

((GV0065LE)) தொகுதி மக்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பற்றுவேன் எனக் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாட்டு பாடி அசத்திய குழந்தைகளுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அமைச்சருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

((GV0065L0)) குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட ஆவத்திபாளையம், களியனூர், சுபாஷ் நகர், அம்மன் நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனங்களில் நின்றபடியும், வீடு வீடாகச் சென்றும் பொதுமக்களிடம் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

((GV0065L4)) விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், தொகுதிக்குட்பட்ட தந்தை பெரியார் நகர், வழுதரெட்டி, விராட்டிகுப்பம், ஜி.ஆர்.பி தெரு, பாப்பான்குளம் உள்ளிட்ட 12 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கியும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 சிலிண்டர், இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்ட அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கியும் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலைகள் சூட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comment

Successfully posted